ஆனைமலையில் இலவச பொது மருத்துவ முகாம்..!!

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை பொள்ளாச்சி மற்றும் மற்றும் கற்பகம் மருத்துவமனை கோவை இணைந்து நடத்தும், இலவச பொது மருத்துவ முகாம் ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது.

காலை 9:30 முதல் மணி மதியம் 3 மணி வரை நடைபெற்றது.

முகாமை ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் துவங்கி வைத்தார். முன்னாள் ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் முன்னிலை வகித்தார். மேலும், ஆனைமலை பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

முகாம் ஏற்பாடுகளை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் மற்றும் அறங்காவலர்கள் எம்.கவிதா, பெ.ஆனந்தகுமார், கே.மைதிலி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் முகாம் ஆலோசனை குழுவில் த.ராஜேஷ்குமார், எஸ்.சுந்தரவடிவேல், எஸ்.முருகானந்தம், எஸ்.மோகன்ராஜ், கி.பிரகாஷ், பிரேமா ஆகியோர் முகாமை வெற்றிகரமாக நடத்த துணை நின்றனர்.

முகாமில் பொது அறுவை சிகிச்சை சம்பந்தமான பரிசோதனைகள், மகளிர் மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள், கண் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் பொது மருத்துவம் குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

நடைபெற்ற முகாமில் நூற்றுக்கணக்கான பேர் பரிசோதனைகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts