கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (வயது 33). இவருடைய மனைவி சவுடேஸ்வரி (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. அசோக்கும், சவுடேஸ்வரியும் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அதே தொழிற்சாலையில் திண்டுக்கல்லை சேர்ந்த திருமணமான முத்துப்பாண்டி (32) என்பவரும் தொழிலாளியாக வேலை செய்தார். அப்போது. முத்துப்பாண்டிக்கும், சவுடேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த அசோக் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவனைப் பிரிந்து சவுடேஸ்வரியும் முத்துப்பாண்டியும் நெகமம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் முத்துப்பாண்டி அடிக்கடி மது குடித்து விட்டு வந்து சவுடேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சவுடேஸ்வரி தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் நெகமம் போலீசார் அங்கு சென்று, சவுடேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அருண்குமார், கிணத்துக்கடவு.