மழையால் முறிந்து விழுந்த மரம்! போக்குவரத்துக்கு சிக்கல்! சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!!

கணபதி அத்திப்பாலயம் பிரிவு, புதிய வார்டு எண் 20, டெக்ஸ்டூல் ஃபீடர் சாலை, கடந்த
புதன்கிழமை 3ஆம் ஆகஸ்ட் அன்று இரவு காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. மரம் சாலையின் இடதுபுறம் விழுந்து ஒரு புறம் எந்த வண்டியும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பாக உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகுகின்றனர். அருகிலுள்ள விமானப்படை கடற்படையின் குடியிருப்பு வளாகமும் (AFNHE) சேதமடைந்துள்ளது. கோவை மாநகராட்சி இம்மரத்தை அப்புறப்படுத்தி உதவுமாறு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஹரி சங்கர், கோவை வடக்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts