கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பணை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு உணவகத்தில் புழு மிதக்கும் கெட்டுபோன உணவுகளை விற்பனை செய்தது. அதை தொடர்ந்து புகார் அளித்ததின் பெயரில் உணவு பாதுகாப்பு துறையினர் உடனடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் கெட்டுப்போன உணவு கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடை சீல் வைக்கப்படட்டது. அதனை தொடர்ந்து நேற்று நகர்புற சுகாதார துறை ஆய்வாளர் என்.கே.அஜித்குமார் தலைமையில் அரசு சுகாதார துறையிலிருந்து கட்டப்பணையில் பல உணவு கடைகளில்
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சோதனை செய்த போது கெட்டுப்போன சிக்கன் குழம்பு, இறைச்சி, பிரைடு ரைஸ் மற்றும் மீன் போன்றவை கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனாலும் இவ்வாறு சிறு தொகை அபராதம் விதிப்பதால் மீண்டும் இதே தவறுகள் தான் நடக்கின்றன எனவும் இதை தவிர்க்க தவறு செய்யும் கடைகள் நிரந்தரமாக மூட வேண்டும். பழைய கெட்டுப்போன உணவுகள் கடைகளில் வழங்படமாட்டது என்று உறுதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.