சிங்கம்புணரி அருகே சமத்துவபுரத்தில் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த நாள் விழா!!

‘சமூக நீதி நாயகன்’ தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு பெருந்திரளானோர் வந்திருந்து மாலை அணிவித்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இனிப்புகள் வழங்கப்பட்டன. திமுக ஒன்றிய செயலாளர் பூமிநாதன், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பெரு.ராசாராமன், தமிழ்த் தேசிய உணர்வுவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கர்ணன், மே 17 இயக்கத்தின் பாண்டியராசன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சமூகநீதிக்கான உறுதிமொழியை திராவிடர் கழக சிவகங்கை மாவட்ட செயலாளர் ராசாராமன் வாசிக்க, அதனைப் பின்பற்றி அனைவரும் வாசித்து சமத்துவ சமுதாயம், அனைவருக்கும் சமமான சமூகநீதி, பெண்களுக்கான முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

இந்நிகழ்வில், சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய திமுகழக செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை அமைப்பாளர் பூரண சங்கீதா, ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், பேரூர் கழக செயலாளர் கதிர்வேல், நகர அவைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன்,

நகர துணைச் செயலாளர் அலாவுதீன் யாகூப், தொழிலதிபர்கள் கே.ஆர்.ஏ.கணேசன், குடோன் சுப்பிரமணி, ஞானி செந்தில், கவுன்சிலர்கள் ஜெயக்குமார் மற்றும் செந்தில் கிருஷ்ணன், சமத்துவபுரம் அமைந்துள்ள கண்ணமங்கலப்பட்டி கிளையின் சார்பில் கணபதி, ராசேந்திரன் மற்றும் பெருமாள்,

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மூத்த திமுக உறுப்பினர்கள் வையாபுரிப்பட்டி சின்னையா மற்றும் தனுஷ்கோடி ஆசிரியர், நகர இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். முன்னதாக, சமத்துவபுரம் பயனாளிகள் சார்பில் அனைவரும் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் வரவேற்கப்பட்டனர்.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts