தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 2012 ஆண்டு தமிழக அரசு பத்திர பதிவு துறை ஆன்லைன் முறையில் அறிமுகம் செய்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அதன் பின்னர் நில மோசடி தடுக்க தனி சட்டம் கொண்டு வந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எவ்வளவு சட்டம் இருந்தும் பணத்தை பெற்றுக் கொண்டு இன்னும் மோசடி நடந்து வருகிறது. நிலம் மோசடி தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மயில்வாகனன். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்திகிணறு, போடுபட்டி, லக்கம்மாள்தேவி, புங்கவார்நத்தம், விகாம்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் வாங்கி கொடுத்தாராம்.
இதில் நிலத்தை விற்பனை செய்ய விரும்பாத விவசாயிகளின் நிலத்தையும் போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து மயில்வாகனன் மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடி செய்து உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வாகனனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மயில்வாகனனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.