கோவில்பட்டி அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த அரசு பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜாத்தி(45). கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1994 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஆசிரியா் பயிற்சி படித்து வந்த இவா் ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண் எடுத்து இருந்தார் இதனை திருத்தி,
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
77 மதிப்பெண் பெற்றது போல போலி மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் கொடுத்து 2002 ஆண்டு விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
தற்போது நாலாட்டின்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேலை பாா்த்து வருகிறார்.இது குறித்து முறையான ஆய்வுக்குப் பின் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ராஜாத்தி தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இவா் மீது கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலா் சின்னராசு அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.