மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எம் தமீமுன் அன்சாரி அவர்களிடம் நாளைய வரலாறு நிருபர்கள் குழு நேர்காணல்..!!
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மனிதநேய ஜனநாயககட்சியின் மாநில பொதுச்செயலாளர் கோவை வருவதாக கிடைத்த தகவலின்படி அவரை நேர்கானல் எடுக்கவேண்டும் என்ற நமது நோக்கத்தை அதன் மாவட்ட செயலாளர் MH அப்பாஸ் அவர்களை நமது கோவை தெற்கு மாவட்ட தலைமை நிருபர் ஹனீப் அலைபேசியில் அழைத்தபோது அவர்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் கோட்டை மேடு வைரவிழா திருமணமன்டபத்தில் 8 மணிக்கு நடைபெற உள்ளது, வாருங்கள் எனபதில் வந்தது. உடனே தமிழக தலைமை நிருபர் ஈசா அவர்களுடன் கோவை தெற்கு மாவட்ட தலைமை நிருபர் ஹனீப் மற்றும் ஆனைமலை நிருபரான அலாவுதீனும் சென்றிருந்தோம். நம் பத்திரிக்கைக்கு
நல்ல வரவேற்பளித்து வரவேற்றார்கள்!! மனிதநேய ஜனநாயக கட்சியின்
பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி அவர்களை சந்தித்து நேர்கானலை தொடர்ந்தோம்!
கேள்வி:
மனிதநேய ஜனநாயக கட்சியின் செப்டம்பர் 10 தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் ஏன் எதற்காக நடத்துகிறீர்கள்!
பதில்
பொதுச்செயலாளர் Mதமீமுன் அன்சாரி:
தாங்கள் கேட்கின்ற இந்த கேள்வி வியப்பாக இருக்கிறது குறளற்ற மக்களுக்காக குரல் கொடுக்கின்ற ஜனநாயக வழியில் தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தனது பணிகளை செய்து வருகிறது அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லக்கூடிய பிரச்சனைகளை வேறு யாராவது எடுத்துச் செல்ல மாட்டார்களா என்கின்ற எண்ணம் மக்களுக்கு எழும் போதெல்லாம் அந்த செய்திகளை பிரச்சனைகளை இதய பூர்வமாக மனிதநேய ஜனநாயக கட்சி அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லுகிறது
அந்த வகையில் தமிழக சிறைகளில் வாடுகின்ற ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலே செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் வெளியே வருகின்றனர்.
அரசாங்கம் விடுதலை செய்கிறது.
அந்த அடிப்படையில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தான் இந்த செப்டம்பர் 10 போராட்டத்திற்கான அடிப்படை காரணமாக அமைகின்றது.
ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான் என்பது விதி அதையும் தான்டி
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எந்த கேள்விகளும் இல்லாமல் சிறைச்சாலையிலே வாடிக் கொண்டிருக்க கூடிய ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு சிறைவாசி மக்களும் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற ஒற்றைக் கோரிக்கை தான் செப்டம்பர் 10 தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்.
நாங்கள் கடந்த காலத்திலே சட்டமன்றத்தில் இருந்தபோது இதே கோரிக்கையை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக கொங்கு இளைஞர் பேரவையினுடைய தலைவர் மதிப்பிற்குரிய தனியரசு அவர்களும்
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் ஒன்றினைந்து சட்டமன்றத்திலே குரல்களை எழுப்பி இருக்கிறோம்.
அந்த அடிப்படையில் வருகின்ற 2022 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது!
கேள்வி:
கடந்த ஜனவரி மாதம் 8ல் இதே கோரிக்கையை முன்வைத்து கோவையில் நீங்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்திற்கு பின் அரசாங்கத்தின் உடைய அணுகுமுறை எப்படி இருந்தது
பதில்:
பொதுச்செயலாளர் Mதமீமுன் அன்சாரி
ஜனவரி 8-ல் நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னால் தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையிலே ஒரு ஆனையத்தை அரசு அமைத்து
விசாரணை செய்வதாக அரசாங்கம் அறிவித்தது அதை தவிர வேற எந்த ஒரு பொறுப்பான செயல்பாடும் அரசாங்கத்திடம் இருந்து இதுவரை இல்லை!
கேள்வி:
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை! நீதிபதி ஆதிநாதன் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
பதில்:
பொதுச்செயலாளர் Mதமீமுன் அன்சாரி
கடந்த ஜனவரி 8 கோவையில் நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு பின்னால் அரசாங்கம் அறிவித்த இந்த நீதி அரசரின் ஆதிநாதன் ஆனையம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக பேசுவதற்கு இதுவரை ஒரு முறை கூட கூடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது
ஆதிநாதன் ஆணையம் அமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது அதன் முகவரிக்கு நான் ஒரு கடிதம் அனுப்பிய போது அந்த முகவரியில் அப்படியொரு ஆணையமே இல்லைஎன்பதுதான் எனக்கு பதிலாக வந்தது
ஆதிநாதன் என்ற ஆனையம் அமைத்து
அரசாங்கம் மக்களையும்
சிறைவாசி குடும்பங்களையும் ஏமாற்றுவதாகவே பார்க்கிறேன்
கேள்வி:
செப்டம்பர் 10 சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை நீங்கள் நடத்துகிறீர்கள் இது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்கள்!
பதில்
பொதுச்செயலாளர் Mதமீமுன் அன்சாரி
கடந்த ஜனவரி 8 கோவையில் நடந்த போராட்டத்திற்கு பின்னால் ஒரு 100 நாட்கள் கவுண்டவுன் நாம் அமைத்திருந்தோம் அதற்கு பின்பும் எந்த விதமான ஒரு முன்னேற்றமும் அரசாங்கத்திலிருந்து கிடைக்காத காரணத்தினால் தஞ்சாவூரில் எங்களது தலைமை செயற்குழுகூடி செப்டம்பர் 10 ல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் பணிகள் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக தமிழக முழுவதிலும் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக திருப்பூர் நீலகிரி கோவை போன்ற பகுதிகளிலே நான் நேரடியாக கலந்து கொண்டு இந்த போராட்டம் ஏன் எதற்கு என்கின்ற பல்வேறு விளக்கங்களையும் கொடுத்து பல்வேறு சமூக மக்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த போராட்டத்தை நாம் ஏற்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதனுடைய தாக்கம் என்பது வருகின்ற செப்டம்பர் 10 தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலிமிருந்து கலந்து கொள்கின்ற ஜாதி மத பேதம் இன்றி ஆண்களும் பெண்களும்
ஜமாத்தார்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளும்போது நிச்சயமாக அரசாங்கத்திடம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என முழுமையாக நம்புகிறோம் அப்படி அரசாங்கம் இந்த போராட்டத்திற்கு பின்னால் எந்த மாதிரியான அணுகுமுறையை எங்களைப் போன்ற கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி:
செப்டம்பர் 10 சென்னையில் நடைபெறும் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தில் எத்தனை மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்
பொதுச் செயலாளர்
மு தமீமுன் அன்சாரி
தமிழக முழுவதிலிருந்தும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 1000த்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கையோடு எங்களுடைய பணிகளை அமைத்திருக்கிறோம் அதற்கான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அதனுடைய மாவட்ட பொறுப்பாளர்கள் அதனுடைய மாநில பொறுப்பாளிகள் திறம்பட தங்களுடைய பணிகளை செய்து வருகிறார்கள் இது எல்லாம் தாண்டி ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறைச்சாலைகளை விட்டு முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் எல்லா மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்!!
இவ்வளவு நேரம் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி எங்கள் நாளைய வரலாறு புலனாய்வு இதழின் நேர்காணலுக்காக செய்திகளை வழங்கிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் அன்சாரி அவர்களுக்கும் கோவை மாவட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நாளை வரலாறு புலனாய்வுஇதழின் சார்பாக நன்றியினை மனதார தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்!!!
தொகுப்பு:
-கோவை தெற்குமாவட்ட தலைமை நிருபர்
HM முஹம்மதுஹனீப்
-போட்டோ தொகுப்பு
ஆனைமலைநிருபர்
அலாவுதீன்.