லண்டன் சைக்கிள் பயண அனுபவத்தை கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்த நடிகர் ஆர்யா!!

மனவலிமை இருந்ததால்தான் 1560 கிலோமீட்டர் இலக்கை 125 மணி நேரத்தில் எட்ட முடிந்ததாக கேப்டன் திரைப்பட பிரமோஷனுக்காக கோவை வந்த நடிகர் ஆர்யா கல்லூரி மாணவர்களிடையே பேசினார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேப்டன் திரைப்பட பிரமோஷனுக்காக நடிகர் ஆர்யா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அரசு ஊரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். முன்னதாக ஆர்யாவுக்கு அவரது திரைப்பட பாடல்களுக்கு கல்லூரி மாணவர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ட்ரோனில் கேப்டன் படத்தின் போஸ்டர் பறக்கவிடப்பட்டது காண்பவரை கவர்ந்தது.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஆர்யா, மன வலிமை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று எனவும், சைக்கிளில் அதிக தூரம் பயணிப்பதற்கு மனவலிமை தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தமக்கு அது போன்ற மனவலிமை இருந்ததால்தான் லண்டனில் 1560 கிலோமீட்டர் தூரத்தை 125 மணி நேரத்தில் எட்ட முடிந்தது எனவும், அதிகப்படியான வெயிலில் உடல் ஒத்துழைக்காத போதும், மனவலிமையின் காரணமாக இலக்கை எட்ட முடிந்தது எனவும் தெரிவித்தவர், மாணவர்கள் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

கேப்டன் திரைப்படம் நன்றாக வந்துள்ளது எனவும், அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக படம் அமைந்திருப்பதாகவும் கூறிய நடிகர் ஆர்யா, அனைவரும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

– சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts