வெள்ளலூர் குப்பை கிடங்கு – கோவை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையாளருக்கு டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

வெள்ளலூர் குப்பை கிடங்கு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற கோரி தொடர்ந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றாததை கண்டித்து டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.

அதனை விசாரித்த டெல்லி பசுமை தீர்ப்பாயம் வெள்ளலூர் குப்பை கிடங்கின் தற்போதைய உண்மை நிலை மற்றும் குப்பை சேகரிக்க சென்ற பெண் இறந்ததற்கான ஆய்வு அறிக்கை ஆகியவற்றை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்திட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts