தீபாவளி பண்டிகையின் போது, அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும்’ கோவை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பேணிக்காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமை. குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையுள்ள, பசுமை பட்டாசுகளை மட்டுமே தீபாவளி பண்டிகையின் போது வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி, பட்டாசு வெடிக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள, குடியிருப்போர் நலச்சங்கங்கள் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது. குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் வெடிப்பதை தவிர்த்து, மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும். இவ்வாறு, கலெக்டர் சமீரன் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.