ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றபோது, 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நிலப்பரப்பை இணைத்து ஒரே நாடாக உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர் வல்லபாய் படேல். அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி, “தேசிய ஒற்றுமை தினமாகக்” கொண்டாடப்படும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 565 பிரிவுகளாகப் பிரிந்து கிடந்த சமஸ்தானங்கள், தங்களை சுதந்திரான பகுதிகளாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய அரசுக்கு சவாலாக இருந்த சமயத்தில் அந்த பொறுப்பு உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பாட்டியாலா, குவாலியர் மற்றும் பரோடா போன்ற சமஸ்தானங்கள் உடனடியாக இந்தியாவுடன் இணைந்தன.
அதேபோல 552 சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமாகவும் இணைக்கப்பட்டன.
காஷ்மீர், ஹைதராபாத், பிகானிர் மற்றும் திருவிதாங்கூர் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ராணுவத்தை அனுப்பி அந்தப் பகுதிகளை படைபலத்தால் இந்தியாவுடன் இணைத்தார்.
அவர் பிறந்த தினமான இன்று (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மினி மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்வில் சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி,பள்ளித் தலைமையாசிரியை கலாநிதி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி வட்டாட்சியர் சாந்தி தலைமையில் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.