கடலில் இருந்து நிலக்கரியை கொண்டு வரும் இரும்பு பாலம்..!

டன்குடி அனல்மின் நிலையத்திற்கு கடலில் இருந்து நிலக்கரியை கொண்டு வர இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, 6 மாதத்தில் 660 மெகாவாட் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு கடலில் இருந்து நிலக்கரிைய கொண்டுவர இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, 6 மாதத்தில் 660 மெகாவாட் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தா.ர் அனல்மின் நிலையம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி காலன்குடியிருப்பில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மூன்று கட்டங்களாக இப்பணி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட மின்எந்திரம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. அடுத்த இரு கட்டங்களில் மேலும் 660 மெகாவாட் கொண்ட அனல்மின் எந்திரங்கள் அமைக்கபட உள்ளது. ராட்சச கம்பிபாலம் அனல்மின்நிலைய வளாகத்தைச் சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிந்துள்ளது. மேலும் அருகிலுள்ள தருவைகுளத்து தண்ணீர் அனல் மின்நிலையத்தின் உள்ளே வரமுடியாத அளவுக்கு உறுதியான சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கிழக்கில் கல்லாமொழி கடற்கரை பகுதியிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1. 50 கோடி டன் நிலக்கரி கையாளும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கான துறைமுகம் அமைக்கும் பணிகளும் இரவு, பகலாக நடந்து வருகிறது. கடற்கரையிலிருந்து சுமார் 8 கி. மீ. தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, அதிலிருந்து நிலக்கரியை கொண்டுவர உயர்மட்ட ராட்ச இரும்பு கம்பிபாலம் அமைக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த பாலம் வழியாக ராட்சத கண்டெய்னர் மூலம் கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. 8 ஆயிரம் பேருக்கு வேலை இது குறித்து உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடி கொண்டு வரும் உயர்மட்ட கம்பிபாலம் அமைக்கும் பணி முடிந்தவுடன் முதலில் முதல்மின் அலகு சோதனை மின்சாரம் உற்பத்தி தொடங்கும். இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியில் கொண்டு செல்வதற்காக மின் கோபுரத்தில் கம்பிகள் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மின்கம்பிகள் செல்லும் பாதையில் தென்னை, பனை, சவுக்கு போன்ற விவசாயத்தை தவிர்பது நல்லது. சுமார் ஆறு அடி உயரத்திற்குள் 6 வளரும் பயிர்களை பயிரிடுவது மிக மிக நல்லது என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 -வேல்முருகன் தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts