கோவை வடவள்ளியில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றதது. மேலும் இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டபட்டுள்ள சாலைகளில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீரும் தேங்கி முழுவதுமாக பள்ளம் இருக்கும் இடங்களை தண்ணீர் மறைத்து உளள்து. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளில் செல்வதற்கு கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர், சில சமயங்களில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.