கோவையில் உக்கடம் பகுதியை பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த உக்கடம் பகுதியில் அருகில் தான், கமகமெக்கும் வாசனையுடன் பல தரப்பட்ட உணவுகள் தயாராகி வருகிறது.
உக்கடம் பேருந்து நிலையத்தின் இடதுபக்க பக்கவாட்டு சாலைக்குள் சென்று ஈஸ்வரன் கோவில் வீதிக்குள் நுழைந்தால் அங்குதான் இருக்கிறது கோவையின் ஃபுட் ஸ்ட்ரீட். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியில் பிரியாணிக்கென பிரபலமாக உள்ள கடைகள் துவங்கப்பட்டன. உணவு பிரியர்கள் அதிகமாக வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அருகிலேயே பல்வேறு விதமான உணவு கடைகள் தொடங்கினர்.
இதனாலேயே இந்த ஃபுட் ஸ்ட்ரீட்உருவானது. இங்கு பெரிய உணவகங்கள் முதல், தள்ளுவண்டி உணவங்கள் வரை கடைகள் செயல்பட்டு வருகின்றன. பீப், சிக்கன், முட்டை பிரியாணி வகைகள், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், கோழிக்கறி மற்றும் மாட்டுக்கறியில் தயாரிக்கப்பட்ட விதவிதமான சைட் டிஷ்கள், நூல் பரோட்டா, பரோட்டா ரோல் என கம கமக்கும் மனத்துடன் கூடிய உணவுகள் இங்கு கிடைக்கின்றன.
இதோடு, நுங்குபால், சாலட், மில்க் ஷேக் வகைகள், குலுக்கி சர்பத் குல்பி, ஃப்ரூட் சாலட் வகைகளும் குறைந்த விலையில் இங்கு கிடைக்கின்றன.
மாலை 5 மணிக்கு மேல் கோவையின் இந்த ஃபுட் ஸ்ட்ரீட் படு பிசியாக தொடங்கிவிடும், சனிக்கிழமை மாலை என்றால் உணவு பிரியர்கள் கூட்டம் அலைமோதும் என்கிறார்கள் வியாபாரிகள்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.