டைடல் பார்க் அமைக்க இடம் தேர்வு! – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!

தூத்துக்குடியில் டைடல் பூங்கா (Tidle park) அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது தொடர்பாக மேலாண்மை இயக்குநா் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தாா்.

தொழில் நகரமான தூத்துக்குடியில் துறைமுகம், விமானம் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளதால் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தூத்துக்குடியில் தொழில் பூங்கா அமைக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று தமிழக தொழில் பூங்கா மேலாண்மை இயக்குனர் பல்லவி பல்தேவ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மற்றும் அதிகாரிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் டைடல் பூங்கா அமைப்பதற்காக திருச்செந்தூர் சாலையில் உள்ள இடம் மற்றும் மதுரை புறவழிச்சாலை சாலையில் உள்ள இடங்கள், மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அருகில் மற்றும் எதிர்புறம் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பர்னிச்சர் பூங்கா திட்டம் அறிமுகம் அதையும் இன்று தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலை சர்வதேச பர்னிச்சர் பூங்கா இணைப்பு சாலையையும் பார்வையிட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த ஆய்வு முடிந்தபின் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை வழங்கப்படும். மேலும் தூத்துக்குடியில் அமைக்கப்படும் தொழில் பூங்காவால் தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts