தொழில் நகரமான திருப்பூருக்கு நாள்தோறும் வெளி மாநிலத்திலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர். இதில் அதிக அளவில் வெளிமாநிலத்தை சேர்ந்த ஹிந்தி பேசும் மக்கள் படையெடுத்து வரும் ஊரில் முக்கியமான ஊர்கள் சென்னை மற்றும் திருப்பூர் ஆகும்.
கார்மெண்ட்ஸ் அதிக அளவில் இயங்கி வரும் திருப்பூர் மாநகரில் உள்ளூர்வாசிகளுக்கு நிகராக வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் இங்கே வசிக்க தொடங்கிவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரின் முன்பு உள்ள பலகையில் சகாயோக் என்ற வார்த்தை கொண்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
இதற்கு ஆங்கிலத்தில் தகவல் மையம் என்பதாகும்.
ஏற்கனவே அங்கு இன்ஃபர்மேஷன் சென்டர் என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு மேல் சகையோ என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தி ஆங்கிலம் ஹிந்தி மற்றும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதற்கான விளக்கம் யாருக்கும் தெரியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால் பல தரப்பட்ட இடத்திலிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து திருப்பூர் ரயில்வே நிலைய நிர்வாகம் அந்த அறிவிப்பு வாசகம் அடங்கிய அட்டையை அகற்றி உள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா திருப்பூர்.