தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற எம்பவர் இந்தியா கோரிக்கை!!

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக எம்பவர் நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஆ. சங்கர் செயல் இயக்குநர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

எம்.ஜி.ஆர். பார்க்கிலிருந்து எதிரேயுள்ள இசக்கியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு இடையிலுள்ள சாலையைக் கடப்பதற்கு உயர்நடைமேடை பாலம் (OverBridge) வசதி அமைக்க வேண்டும். முயல் தீவில் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத்தளம் மற்றும் தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் Maritime Museum, அமைக்க வேண்டும்.

கண் தெரியாத, காது கேளாத மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர அரசு ஆசிரியர் படிப்பு நிறுவனத்தை (Special Teacher Training Institute) தூத்துக்குடியில் அமைக்க வேண்டும். தூத்துக்குடி முதல் வாஞ்சி மணியாச்சி வரை உயர்தரமான சாலை வசதி அமைக்க வேண்டும். திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தமிழக முதல்வரின் காப்பீடு திட்ட நிரந்திர அலுவலகத்தை அமைக்க வேண்டும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கற்புடையார் வட்டம், 4 வது வார்டு அப்துல் அஜிஸ் தெரு, அபுபக்கர் சித்திக் தெரு, ஈக்கியப்பா தைக்கா தெரு ஆகிய தெருக்களில் உள்ள மணல் சாலைகளை அகற்றி புதிய தார் ரோடுகள் உடனடியாக அமைக்க வேண்டும். வல்லநாடு முதல் ஸ்ரீவைகுண்டம் (மணக்கரை வழியாக) வரை உயர்தரமான சாலை வசதி அமைக்க வேண்டும்.

வல்லநாடு அருகில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த இரயில் டிக்கெட் முன்பதிவு நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts