ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு நடைபெறுகிறது அதைத் தொடர்ந்து
தூத்துக்குடியில் வருகிற 15ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதுகுறித்து தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் வரும் 15ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, அழகாபுரி, மாதாநகர், செயின்ட் மேரிஸ் காலனி, கிருஷ்ணராஜபுரம், முத்து கிருஷ்ணாபுரம், மேல அரசடி, கீழ அரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம் பூபாலராயர்புரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம். குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல் புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமர் விளை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி நிருபர்,
-வேல்முருகன்.