ரூ.2 லட்சம் பரிசு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
முக்கிய அம்சங்கள்:
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், “வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
யார் இந்த பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்?
இந்தப் பரிசை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். வயது வரம்பு ஏதுவுமில்லை.
உழவன் செயலி:
விண்ணப்பதாரர்கள் உழவன் செயலி மூலம் குறிப்பிட்ட படிவத்தில் ரூ.100 பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், ஆதார் எண், தந்தையின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும். விவசாயிகள் ஏற்றுமதி செய்த விளைபொருளின் பெயர், ஏற்றுமதி செய்யப்பட்ட விளைபொருளின் அளவு, ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள், பயிர் விளைவிக்க மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்ட விவரம் ஆகியவை விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். மேலும், விண்ணப்பத்தில் பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது எண்ணும் தேதியும் குறிப்பிடப்பட வேண்டும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விண்ணப்பதாரர்கள் தனது சாதனையை சரியான விளக்கத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான, மாவட்ட அளவிலான குழுவிடம் விளக்க வேண்டும்.
சிறந்த விவசாயி யார் (Best Farmer)!!!
நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றி விவசாயிகள் உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பலவகையான விருதுகளை அறிவித்து விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. அதற்கு முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட அளவிலான குழு :
மாவட்ட அளவிலான குழு, பெறப்பட்ட விண்ணப்பங்களைக் குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளில் தகுதியானவர்களின் விவரங்களை, தங்களது பரிந்துரைகளுடன் மாநில அளவிலான குழுவுக்கு அனுப்புவார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.