இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் M.P. சக்திவேல் அவர்களின் பிறந்தநாள் விழா பொள்ளாச்சி சக்தி ஹோட்டலில் நடைபெற்றது.
பிறந்தநாள் விழாவில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னாள் மாவட்ட தலைவருக்கு வாழ்த்துக்களைக் கூறினார்கள்.
இதுகுறித்து இந்திய தேசிய காங்கிரஸின் முன்னணி நிர்வாகி கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறுகையில்:-
இன்று முன்னாள் மாவட்ட தலைவர் சக்திவேல் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே இருக்கும் நமது பேரியக்கத்தின் தோழர்கள் நமது தலைவர் மீதுள்ள அன்பினால் வால்போஸ்ட் அடிப்பதும் தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து கூறியும்,
நேரில் கோவை தெற்கு மாவட்ட முன்னணி முக்கிய நிர்வாகிகள் வந்து வாழ்த்து கூறியது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது, மேலும் ஒருவர் பதவியில் இருக்கும் பொழுது அவரை நாடி வருகின்ற கூட்டம் இயல்புதான்.
ஆனால் நமது மாவட்ட முன்னாள் தலைவர் அவர்களுக்கு பதவி இல்லாத போது அவர் மீது பேரன்பு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் நண்பர்கள் வந்து அவருக்கு வாழ்த்து கூறியது,
அவர் அந்த பொறுப்பில் இருக்கும் பொழுது கடமை தவறாது செயல்பட்டதன் விளைவு, அவருக்கு அனைவரும் ஒன்று திரண்டு வந்து பாராட்டுகிறார்கள் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சுரேஷ்குமார்.