கோவை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூண்டோடு விலகமுடிவு.? கட்சியினர் அதிர்ச்சி..!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட முக்கிய மற்றும் முன்னணி சில நிர்வாகிகள் தங்களின் மன குமரல்களை கொட்டி தீர்த்து வருகிறார்கள். அதன்படி நமது நிருபர்கள் களத்தில் இறங்கி செய்தியை சேகரித்த பொழுது சில மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் MP சுகுமார் நியமிக்கப்பட்டார் அவர் நியமிக்க பட்டதில் இருந்து
தெற்கு மாவட்டத்தில் கட்சிப் பணிகள் நடக்கவில்லை அவரை சந்திக்க முடியவில்லை கட்சியினரை மதிப்பதில்லை என்கிற கூற்றசாட்டு இருந்து வருகிறது
மேலும் அவர் இதுவரை மாவட்ட கழக கூட்டத்தை கூட்டல்லை சாதிய அரசியல் செய்து வருகிறார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உறவினர் அவருடன் டென்டர் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சியை அழிக்கும் நோக்கில் கட்சியில் சிறப்பாக செயல்படும் கழக நிர்வாகிகள நீக்கிவிட்டு தனது நண்பர்கள் உறவினர்கள் என எதற்க்கும் உதவாத நபர்களை கட்சிப் பொருப்பாளர்களாக அறிவித்து வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் ஓட்டுகளை கூட வாங்க முடியாத நபர் வால்பாறை பொள்ளாச்சி கிணத்துக்கடவு தொண்டாமுத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக நியமித்திருப்பதே கட்சி வட்டாரத்தில் அதிருப்தியை உருவாக்கியது தொடர்ந்து இவர் மாவட்ட செயலாளராக இருப்பாரேயானால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கோவை தெற்கு மாவட்டத்தில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் புலம்பி வருகின்றனர் டிடிவி தினகரன் அவர்கள் இந்த பிரச்சனையில் களமிறங்கி களை எடுத்தால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறி வருகின்றனர்.
-ஈஷா. ராஜேந்திரன். சுரேஷ்குமார்.