கோவை மக்களிடையே வரவேற்பை பெறும் ஸ்ட்ரீட் லைப்ரரி!

மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் இடையே நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்ட உத்தரவிட்டார். போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் நேரடியாக மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், ஆட்டோ நூலகம், வீதி நூலகங்கள், போலீசாரின் மன இறுக்கத்தை போக்க கோவை மாநகர போலீஸ் சார்பில், காவல் நிலையங்களில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாநகர போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. மாநகரம் முழுவதும், 2,000 ஆட்டோக்களில் மினி நூலகம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் ‘ஸ்ட்ரீட் லைப்ரரி’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சியின் இடையே அமர்ந்து படிக்க வசதியாக, வாரத்தின் 7 நாள்களிலும், 24 மணி நேரமும் இந்த நூலகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று, படித்து முடித்த பின்னர் மீண்டும் புத்தகங்களை இந்த ஸ்ட்ரீட் லைப்ரரியில் வைக்கலாம். பிறர் பயன்பெறும் வகையில், தங்களிடம் உள்ள புத்தகங்களை இந்த நுாலகத்தில் வைக்கலாம். நடைபயிற்சி சென்ற பின்னர் இளைப்பாற அமரும் நேரத்தில் புத்தகங்களை படிப்பது மனதிற்கு அமைதியை தருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts