தூத்துக்குடியில் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் ஆதித்தமிழர் காட்சி சார்பில் அனுசரிப்பு !!!

.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் டிசம்பர் 6 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப் பட்டது.

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்தமிழர் காட்சி சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உண்மையை உரக்கச் சொல்வோம், அம்பேத்கர் சாதித்தலைவரும் அல்ல; மதவாதத் தலைவரும் அல்ல. எங்கெல்லாம் அடக்குமுறைகள் இழைக்கப்படுகிறதோ அதற்கு எதிரான குரல்களுக்குப் பெயர் அம்பேத்கர், எங்கெல்லாம் அநீதி திணிக்கப்படுகிறதோ, அதற்கு எதிரான நீதியின் வேட்கைக்குப் பெயர் அம்பேத்கர், எங்கெல்லாம் பாரபட்சம் நிலவுகிறதோ அதை எதிர்த்து சமத்துவத்துக்காகப் போராடுபவர்களின் தோள்களில் விழும் கைகளின் பெயர் அம்பேத்கர்.          ஆகிய வாசகங்களால் முழக்கமிட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஊர் காவலன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட தொழிற் சங்க தலைவர் சித்திரைவேல், மாநகர செயலாளர் அந்தோணி ராஜ், மாவட்ட அமைப்பாளர் சக்தி, மாவட்ட தொழிற் சங்க தலைவர் தொல்காப்பியர், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆற்றலரசு தென் மண்டல அமைப்பாளர் சுரேஷ் வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts