கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார். ஆட்டோ வாடகை வாகன ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேப்டால் என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இருந்து 2 பொருட்களை வாங்கியுள்ளார், இதனிடையே அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பரிசாக 13 லட்சம் ரூபாய் விழுந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறுந்தகவலில் இருந்த எண்ணுக்கு அவர் அழைத்து பேசியுள்ளார். அப்போது, அவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் டேக்ஸ் கட்ட வேண்டும் வங்கி பரிவர்த்தனை செலவு உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்திய பின்னரே பரிசு தொகையை தர முடியும் என கூறியுள்ளனர், லட்சக்கணக்கில் பணம் தரப்பட உள்ளது என நம்பிய சசிகுமார் அவர்கள் கேட்ட பணத்தை அவர்களுக்கு செலுத்தியுள்ளார்.
அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது ஐந்தாயிரம், பத்தாயிரம் என அவர்கள் தந்த வங்கி கணக்கில் லட்ச கணக்கில், செலுத்தி வந்துள்ளார், ஆனால் பரிசு பணம் சசிகுமார் கணக்கிற்கு வரவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார், இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்கள், ஆன்லைனில் தெரிவிக்கும் உத்தரவாதங்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர், மேலும், பொதுமக்கள் இதுபோன்ற ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.