பொள்ளாச்சி பெரியாக்கவுண்டனூரில் நூலகம் திறப்பு விழா..!1!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பெரியாக்கவுண்டனூர் கிராமத்தில் ஈஸ்வரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிர்வாகி சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். நூலகத்தை வழக்கறிஞர் மயில்சாமி மற்றும் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவர் குணசுந்தரி, கவிஞர் கவியகம், மணிவண்ணன், கவிஞர் பாண்டிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன் மோகன்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகன் மற்றும் முபாரக் ஆகியோர் நூலகத்திற்கு நூல்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தனம் தங்கதுரை. தமிழ்த்துறை மாணவர் வசந்தன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.