உறையும் பனியில் மூணார்!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதி எல்லா வருடமும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் பிரதேசமாக காணப்படும் ஆனாலும் கூட அதிகபட்சமாக -1 முதல் -3 டிகிரி வரையில் குளிர் நிலவும் ஆனால் இந்த வருடம் அதற்கு மாறாக மிகவும் தாமதமாக குளிர் காலம் டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு 15 நாட்களுக்குள்ளாகவே – 5 டிகிரியை எட்டிவிட்டது விடியற்காலையில் ஆங்காங்கே வெள்ளை போர்வை போர்த்தியது போன்று மூணார் முழுவதும் காட்சியளிக்கிறது கடும் குளிரில் மக்கள் அங்கே வாழ்கின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுற்றுலா தளமான மூணார் பகுதியில் குளிர் அதிகமாக இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தாலும் அங்கு செயலை தோட்டங்களிலும் மற்ற விஷயங்களை ஈடுபடும் தொழிலாளர்களின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் உள்ளது காரணம் பனி காலங்களில் தேயிலைச் செடிகள் மற்றும் விவசாயச் செடிகள் கருகி போகும் நிலை ஏற்படுவதால் தொடர்ச்சியான வேலை இல்லாத நாட்கள் ஏற்படும் மற்றும் மக்கள் கருதுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.