கோவை பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாணவ,மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது..
கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாநில அளவிலான தடகள போட்டிகள் வ.ஊ.சி.மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர். தங்கவேலு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பிசியோதெரபி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
V
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சென்னை கோவை மதுரை திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..போட்டிகளில் தடகளம்,தொடர் ஓட்டம்,நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,கூடை பந்து,கபடி,கால்பந்து என முப்பதுக்கும் அதிகமான பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆர்.வி.எஸ்.சுகாதார அறிவியல் கல்லூரி செயலாளர் நாகராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.