தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக நடைபெறும் ‘கோ கிளாம்’ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,விற்பனை கண்காட்சி கோவை சுகுணா அரங்கில் துவங்கியது….

தொடர்ந்து 9 ஆவது

தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக நடைபெறும் ‘கோ கிளாம்’ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,விற்பனை கண்காட்சி கோவை சுகுணா அரங்கில் துவங்கியது….

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

 

இந்நிலையில் பொங்கல் மற்றும் புத்தாண்டு சிறப்பு விற்பனை கண்காட்சியாக தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக கோ கிளாம் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது. ஜனவரி 6,7,8 ந்தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,உணவு வகைகள் என எண்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,இன்னர் வீல் நிர்வாகிகள் கோமதி,சசிகலா ஆனந்த்,பெண் தொழில் அதிபர்கள் தீபிகா,டீனா,ஜூட் மற்றும் டாக்டர் ஃபல்குனி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர். கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில், இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கண்காட்சியில் கல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள்,வைர நகைகள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், இந்தியாவின் பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts