பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம்!! Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசுவாமி திருக்கோயில் பூதப்பாண்டி ஜீரணோத்தாரண புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 26-01-2023 குறித்த நேரத்தில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் பொது மக்கள் மற்றும் வெளியூர் பொது மக்கள்,வெளிமாநில மக்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மாளை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்த கோடி பொது மக்களுக்கும் மஹா அன்னதானம் நடைபெற்றது.
மேலும் இக்கோவிலின் தனிச்சிறப்புகள் இது ஒரு குகைவரைக் கோவில் ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடிமரம் உள்ள இக்கோவிலில் இடை அதிகம் உடைய தேர் உள்ளது.
இக்கோவிலில் வரலாறு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது சுமார் 500 முதல் 600 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தாடகை மலை இராமாயணத்தில் இராமன் தாடகையை வதம் செய்த இடம் முகப்பில் கோவில் உள்ளது. ஒளரங்கசீப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது.
மேலும் இக்கோவிலில் தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைதிறப்பு காலை 4 :00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, பூஜை விவரம் பெளர்ணமி விசேச பூஜை, பிரதோஷ வழிபாடு, அமாவாசை கிரிவலம் நடைபெறும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
நாகர்கோவில் செய்தியாளர்,
-L.இந்திரா வீரபாகு.