பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்ட வெப்ப பலூன் திருவிழா!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை பிரம்மாண்ட பலூன் திருவிழா ஆச்சிப்பட்டியில் தொடங்கியது.
இன்று முதல் இந்த பலூன் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவிழாவில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஒரு பலூன் மற்றும் நெதர்லாந்து, அமெரிக்கா, பிரேசில், கனடா உட்பட 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது.
60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டது.
இந்த பலூன் திருவிழாவில் கலந்து கொண்டு பலூனின் பறக்க தமிழக மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் இன்று அதிகாலையில் பலூன் திருவிழா தொடங்கியதை அடுத்து வானில் வட்டமிட்டு சென்ற ராட்சச பலன்களை கண்டு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவை தமிழ்நாடு சுற்றுலா துறை தனியாருடன் இணைந்து முதல் முறையாக நடத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தீமைகள் விலகி நன்மைகள் பெருகிட நாளைய வரலாறு புலனாய்வு இதழின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார், தமிழகத் துணைத் தலைமை நிருபர்.