கோவையில் நடிகை அமிர்தா அய்யர்! – நடிகைகளுக்கு திறமைக்கே வாய்ப்பு என தகவல்!

கோவையில் நடிகை

கோவையில் நடிகை

கோவையில் நடிகை அமிர்தா அய்யர்! – நடிகைகளுக்கு திறமைக்கே வாய்ப்பு
என பேட்டி!

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை என்றும் திறமையான நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் கோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி அளித்துள்ளார்.

கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் கார்த்திக் தங்க நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தற்போது , “தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும்.

ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” என்றார். இவ்விழாவில் நகை கடை உரிமையாளர் சுமலதா சாய்பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts