தூத்துக்குடியில் முறையான கழிப்பிட வசதி இல்லாததால்
பரிதவிக்கும் பொதுமக்கள்!!
தூத்துக்குடியில் சிறுநீர் கழிக்க வழியில்லை. ஓராயிரம் கடைகள்,சிவன் கோவில் அருகே கடும் எதிர்ப்பு காட்டும் தனி மனிதர்…!
தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய கடைவீதிகள் அருகே முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததால் குறிப்பாக ஆண்கள் அந்தந்த பகுதியிலேயே சிறுநீரை கழித்து வந்தனர்.
அதற்குப் பிறகு மாநகராட்சியில் இருந்து தற்போது பல இடங்களில் சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பறைகள் கட்டத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் ஆங்காங்கே குறிப்பாக பால விநாயகர் கோவில் தெரு, சிவன் கோவில் பானு பிருந்தாவன் ஹோட்டல் எதிரில் இப்படி பல இடங்களில் கட்டப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை தனி ஒருவரே எதிர்க்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஆனால் சிறுநீர் கழிப்பதற்கு மாநகராட்சி சார்பில் அதற்கான ஒப்பந்தங்கள் விடப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் மூலம் கட்டப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில இடங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கிறது இருந்தாலும் தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு தினந்தோறும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள். அவர்கள் அவசரத்திற்கு சிறுநீர் கழிப்பதற்கு இடமில்லாமல் தவித்து வந்தனர். சிவன் கோவில் தெருவில் குறிப்பாக பானு பிருந்தாவன் ஹோட்டல் எதிரில் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் தான் ஆண்கள் சிறுநீர் கழித்து வந்தனர். அப்பொழுது யாரும் எதிர்க்கவில்லை, இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் ஒப்பந்தக்காரர்கள் மூலம் கழிவறை கட்டும் பணியானது தொடங்கியது. அதற்குள் தடையையும் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது ஆனால் அரசாங்கத்தை எதிர்த்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அந்த வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் நிற்காது என்பது யாருக்கும் தெரியாமல் போயிருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடியில் இருந்து
-வேல்முருகன்.