NALAIYA VARALARU
கோவையில் ரமலான் பிறை தென்படவில்லை- கோயமுத்தூர் ஹிலால் கமிட்டி பேட்டி.
30 நாட்களாக பூர்த்தி செய்து வரும் வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிக்கப்பட்டு நோன்பு கடைபிடிக்கப்படுவதாக கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பிறை தென்படவில்லை பிறை பார்க்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களிலும் பிறை தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே வருகின்ற வெள்ளிக்கிழமையை ரமலான் பிறை 1 என கடைப்பிடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் செய்தியாளர்களை சந்தித்த, பிறை பார்க்கும் விழா கமிட்டியின் கோவை மாவட்ட தலைவர் ரஹீம் அஜரத், கோவை கமிட்டியின் பிறை பார்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளி வாசல்களில் நடைபெற்று பிறை சம்பந்தப்பட்ட முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு கமிட்டியாக செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்நிலையில் இன்று ரமலான் பண்டிகையின் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது எனவும் பிறை சம்பந்தமான தகவல்களை தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் உறுதி செய்வதற்காக விசாரித்தோம் எனவும் தொடர்பு கொண்டோம் எனவும் கூறிய அவர் இந்தியாவின் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சென்னை போன்ற தலைநகரங்களிலும் தமிழகத்தினுடைய எந்த மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை என்ற தகவல் கிடைக்க பெற்றதாகவும், இறுதியாக தமிழகத்தினுடைய தலைமை காசிர் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களும் இறுதியாக தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை என கூறியுள்ளதாக தெரிவித்தார்.
எனவே இதன் காரணமாக இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24.03.2023 வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது என கோவை ஹிலால் கமிட்டி சார்பில் அறிவிக்கின்றோம் என தெரிவித்தார்.
இதேபோன்று கோவையில் உள்ள ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து ஜமாத்திலும் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.