சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் மகிழ்வுடன் நடைபெற்ற மகளிர் தின விழா!!!
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர்.
1908ல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது. 1910ல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அனைவரும் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இது முதன்முதலில் 1911ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மகளிர் தினத்தை சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மிகச் சிறப்பாகவும் கோலாகலகவும் கொண்டாடியது.
நேற்று நடத்தப்பட்ட மகளிர் தின விழா, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. கணிதத்துறை தலைவரும் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சுதா வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் மார்கரெட் பாஸ்டின் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, நூற்றாண்டு கடந்த மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் KT.முருகேசன் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் அன்றாட வாழ்வில் பெண்களின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையில் “அன்று முதல் இன்று வரை பெண்கள்!” என்ற தலைப்பில் காட்சி கோப்பு மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
இக்காட்சி கோப்பு மிகவும் உருக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது. கல்லூரி முதல்வரின் தலைமை உரைக்குப் பிறகு சிறப்பு விருந்தினர் KT.முருகேசன் நிகழ்த்திய உரை, மாணவிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியதோடு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டியது. சங்க இலக்கிய முதல் காப்பிய இலக்கியம் வரை பெண்களின் முன்னேற்றத்தையும், வீரத்தையும் இக்காலப் பெண்களுடன் ஒப்பிட்டு, தனது இனிமையான குரலில் பாடி மாணவிகளை மெய்சிலிர்க்க வைத்தார்.
விழாவின் சிறப்பை மேம்படுத்தும் விதமாக மாணவிகளிடம் செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகமும், நடனமும் நடைபெற்றது.
இறுதியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக உதவிப் பேராசிரியர் ஜெயலட்சுமி நன்றியுரை வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண் ஒலிக்க, விழா இனிதே நிறைவு பெற்றது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.