NALAIYA VARALARU
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பகுதியின் அவல நிலை!!!!
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, வார்டு 26, ராஜாஜி தெரு தெற்கு பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த தெருவில் மழை நீர் வடிகாலில் கழிவுநீர் தேங்கி அவை, அவ்வப்போது அப்புறப்படுத்தப்படாததினால் துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.
இந்த தெருவில் தபால் நிலையம் உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர் வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாத நிலையில், ஆங்காங்கே தெருவில் வாகனங்கள் எப்பொழுதும் நிறுத்தப்பட்டு காணப்படுகிறது. மேலும் இங்கு உள்ள கடைகள் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல புகார்கள் அளித்த பொழுதும் தூய்மை பணியாளர்கள் இது தங்கள் வேலை இல்லை என்றும் இவற்றை அகற்றும் பொறுப்பு நகர அமைப்பு ஆய்வாளர் உடையது என்றும் கூறுகின்றனர். நகரமைப்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்களுக்கு புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் அவர் மேற்கொள்வதாக தெரியவில்லை.
ஆகையால் மாநகராட்சி ஆணையர் இப் புகாருக்கு தக்க நடவடிக்கை மேற்கொள்வார் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் முருகன் சென்னை தெற்கு.