NALAIYA VARALARU
தேவிகுளம் MLA அ.ராஜா சட்டமன்ற பதவி பறித்து உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு காரணம் என்ன?
கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ-வான ராஜா பதவிப் பிரமாணத்தை தமிழில் எடுத்துக் கொண்டவர். இந்த நிலையில் இவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ராஜாவின் வெற்றிச் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரளத்தில் கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ராஜா வெற்றிபெற்றார். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ராஜா பதவிப் பிரமாணத்தையும் தமிழிலேயே எடுத்தார். தேவிக்குளம் தொகுதி தனி தொகுதியாகும். இது பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் இந்துவாக இருக்கும் பட்டியலின மக்கள் மட்டுமே இங்கு போட்டியிட முடியும். பட்டியலினத்தில் இருப்பவர்கள் மதம் மாறினால் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்துவிடுவார்கள். அவர்கள் போட்டியிட முடியாது.
ஆனால் ராஜா, தான் கிறிஸ்தவர் என்பதை மறைத்து, பட்டியல் இனத்தவர் என போலிச் சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டு வென்றதாக இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்ற குமார் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் குமார், “ராஜாவின் தந்தை ஆன்டனி, தாய் எஸ்தர் என்பது ஊருக்கே தெரியும். எஸ்தரின் இறுதிச் சடங்கும் தேவாலயத்தில் தான் நடந்தது. ராஜா, ஒரு குறிப்பிட்ட சபையிலும் உறுப்பினராக உள்ளார். அவரது திருமணம் கூட தேவாலயத்தில்தான் நடந்தது” என்று சொல்லி அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
பதில் மனு தாக்கல் செய்த ராஜா, தான் ‘இந்து பறையர்’ என வாதிட்டார். ஆனால், இவ்வழக்கில் உண்மைத்தன்மையை ஆராய்ந்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சோமராஜன், “சி.எஸ்.ஐ சபையின் குடும்பப் பதிவேடுகளை எல்லாம் ஆய்வு செய்ததில் ராஜா கிறிஸ்தவர் எனத் தெரிகிறது. எனவே, பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது” என தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ராஜா தெரிவித்தார். ராஜாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் குமார், ராஜாவைவிட 7,848 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றுப் போனது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகவும் தடை செய்து வைக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்துக்குள் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி இதனுடைய தீர்வை பெறவில்லை என்றால் நிரந்தரமாக இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.