NALAIYA VARALARU
கோடை வெப்பத்தால் சோர்வாகாமல் இருக்க நவீன வசதியுடன் கூடிய நிழற்குடை!! மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பேட்டி!!!
கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசருக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. வெயிலில் போலீசார் சோர்வு அடையாமல் இருக்க நிழற்குடையில் ஏர் கூலர் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்குடையில் சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்து போலீசார் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிய நிழக்குடையை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணன் திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது: அதிகளவு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான சந்திப்பில் தற்போது ஒலிப்பெருக்கி, சிசிடிவி கேமராக்களுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவலரும் சிரமமின்றி 4 புறங்களிலும் தொடர்ந்து கண்காணிக்கவும் விபத்துகளை குறைக்கவும் உதவியாக இருக்கும். இதே போல மற்ற முக்கிய சந்திப்புகளில் நிழற்குடை அமைக்க உள்ளோம், கோடை காலம் என்பதால் காவலர்களுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இம்மாதிரியான நிழற்குடைகள் மூலம் காவலர்களும் பணியாற்ற எளிதாக இருக்கும். தற்போது சில இடங்களில் சாலை பணிகள் நடப்பதால் பணிகள் நிறைவடைந்த பின் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.