கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கம்…

கல்லீரல் செயல் இழப்பு என்பது இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இளம் வயதினர், குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருப்போர் இதனால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். கல்லீரல் செயல் இழந்துவிடும் அளவுக்கு தீவிர நிலை நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், பிளாஸ்மா எக்ஸ்சேஞ், இரத்த சுத்திகரிப்பு, தீவிர சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ சிகிச்சைகளை 2019-ம் ஆண்டு முதலே பின்பற்றி ஏராளமான உயிர்களை மரணத்தில் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளது.இந்நிலையில்,தற்போது கல்லீரல் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வகையில் அடுத்த கட்டமாக, சிக்கலான நிலையில் இருக்கும் மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது,இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்லா.ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், பிரத்யேக கல்லீரல் செயல் இழப்பு பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துவக்கிவைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதிய மையம் குறித்து மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்லா பழனிசாமி கூறுகையில்,புதிய கல்லீரல் நோய் சிகிச்சை மையத்தில்,நன்கு பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினர் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இதில் உள்ள மருத்துவக் குழுவினர் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் டொமினோ வகை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். 1000-க்கும் மேற்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகள் செய்து உலகளாவிய அனுபவம் பெற்ற மருத்துவக் குழுவினர் இருப்பதாகவும், மேலும் விஷங்களால் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்ற விஷமுறிவு அவசர சிகிச்சைக் குழுவும் உள்ளதாக தெரிவித்தார்.மேலும் இந்த சிகிச்சைப் பிரிவானது தீவிர நிலை கல்லீரல் செயலிழப்பு நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிப்பதில் மேற்கு தமிழகத்திலேயே அதிக அனுபவம் பெற்ற மருத்துவமனை என்று கூறினார். தொடர்ந்து அவர்,அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லாமலேயே பல தீவிரநிலை கல்லீரல் நோயாளிகளை காப்பாற்றியுள்ள மருத்துவக் குழுவினரின் திறமையை அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில்,மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி உட்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts