கோவையில்,பல்துறை மருத்துவமனையாக செயல்பட்டு வரும் கே.எம்.சி.ஹெச்,மருத்துவமனில், நுரையீரல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய, லங் இன்ஸ்டிடியூட் ( Lung Institute) என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக நுரையீரல் சிகிச்சை மையத்தை துவக்கியுள்ளது.10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இம்மையத்தில் நுரையீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் உள்நோக்கு நுரையீரல் மருத்துவ மையம் இரு சிறப்பு பிரிவுகளாக செயல்பட உள்ளது.
இதற்கான துவக்க விழா கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது..நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இங்கிலாந்து நாட்டு மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் ஜேம்ஸ் டி சாமர்ஸ், சண்டிகர் மாநிலத்தில், நுரையீரல் மருத்துவத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் டாக்டர் எஸ்.கே. ஜிண்டால் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நுரையீரல் சிகிச்சை மையத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நுரையீரல் நோய்களுக்கான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. எம்பார்க் (EMBARC) இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து (புரோன்சிக்டாசிஸ்) என்ற தலைப்பில் நடைபெற்ற இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று நுரையீரல் மருத்துவத்தில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர். நுரையீரல் தொடர்பான நோய்களை முன்னதாகவே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையேயும் மருத்துவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் கருத்தங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசிய, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நுரையீரல் நோய்களுக்கு தரமான சிகிச்சை வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய லங் இன்ஸ்டிடியூட் ( Lung Institute) துவக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையா ஈ-பஸ் என்ற அதி நவீன மருத்துவமுறையை 2007-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்த முன்னோடி மருத்துவமனை என்ற பெருமை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு இருப்பதாக தெரிவித்தார்.
புதிதாக துவங்கப்பட்ட நுரையீரல் சிகிச்சை மையத்தில், நுரையீரல் சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், ஆர் எம் பி எல் ராமநாதன்,மற்றும் நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் சாந்தகுமார், வேணுகோபால், தீபக் உள்ளிட்ட மருத்துவர்கள் நுரையீரல் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.