கன்னியாகுமரி மாவட்டம், எஸ்.எல். பி அரசு மேல்நிலைபள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் குற்றம் மற்றும் துப்பறியும் போலீஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது,மாணவர்கள் சிறு வயது முதலே போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் எனவும், குற்றங்கள் நடந்தால் அதில் மோப்ப நாய்கள் எவ்வாறு குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது என்பதை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும் மோப்ப நாய்களின் துப்பறியும் திறன் சாகசங்கள் நடைபெற்றது. இதில் கொலை நடைபெற்றால் கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது, வெடிகுண்டு மற்றும் சந்தேகப் பொருட்கள் ஏதேனும் இருந்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது போன்ற மோப்ப நாய்களின் சாகசங்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் .புகழேந்தி அவர்கள் , பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணிய பாலசந்திரா IPS , அவர்கள் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சேம் வேத மாணிக்கம் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-இந்திரா வீரபாகு.