வால்பாறை நடுமலை பகுதியில் குடிமகன்களின் பாராக மாறிவரும் பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழல் கூடங்கள்…

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ளன.இவ்வாறு உள்ள எஸ்டேட் பகுதிகளில் பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு வசதியாக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு நிழல் கூட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது அவ்வாறு அமைக்கப்பட்ட நிழல் கூடங்களை ஒரு சிலர் தேவையற்ற செயல்கள் செய்வதற்கு பயன்படுத்து வருகின்றனர். குடிமகன்களில் சிலர் இந்த நிழல் கூடங்களை பார்களாக மாற்றி வருகின்றனர்.மேலும் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர் வாங்கிவரும் உணவுப் பொருட்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.

இதனால் நிழல் கூடங்கள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளன. மேலும் அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களிலும் சாலைகளிலும் குடித்துவிட்டு பாட்டில்களை போட்டு உடைக்கின்றனர் இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன மேலும் வாகனங்களில் டயர்களிலும் இந்த பாட்டில்கள் குத்தி வானங்கள் பஞ்சராகி விடுகின்றன. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளையவரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts