மனித நேயத்திற்கு எதிராகவும், பெண்களின் மாண்புக்கும், உயிர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி, ஆதாயத்திற்காக வன்முறை திட்டமிட்டு தூண்டிவிட்டு, மத இன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும், இந்தியா ஒன்றிய அரசின் கள்ள மெளனத்தை கண்டித்தும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதிய நிலை நாட்ட வலியுறுத்தி இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழர் வீடியோ கட்சி சார்பில் சந்தனராஜ் மாவட்ட பொறுப்பாளர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
தூத்துக்குடியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் கலவரத்திற்கு காரணமான மணிப்பூர் அரசை டிஸ்மி செய்யவேண்டும் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட கோரி தூத்துக்குடி மாவட்ட மாந்தநேய உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே கலவரம் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மாந்த நேய உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கார்த்தி மகாலியேல் தலைமை தாங்கினார்.
மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீர்ஜான் முன்னிலை வகித்தார் அனைவரையும் மனிதநேய உணவாளர் மெரினா பிரபுவரவேற்று உரையாற்றினார். இதில் பெண்கள் குழந்தைகள் உப்பள தொழிலாளர்கள் பங்கு தந்தைகள் பாதிரியார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம் சுந்தரி மைந்தன், வழக்கறிஞர் அதிசய குமார், சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சம்சுதீன், அருட்செல்வி முகமது கனி, குணசீலன், சுஜித், சந்திரராஜ் , அகமது பாலு, ஜான்சி ராணி, குருசம்மாள், செந்தூர் மணி மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் காந்தி மள்ளர், பலர் கலந்து கொண்டனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
– முனியசாமி, ஒட்டப்பிடாரம்.