தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கொல்லம்பரும்பு அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ வடக்கவாச் செல்லியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம் நேற்று காலை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம், தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழக செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார்.
சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவிலாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 11 ஜோடி காளைகளும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 18 ஜோடி காளைகளும் கலந்து கொண்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அவர்களும் , வீரலட்சுமி சந்தனராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகிரி அவர்களும், சண்முகத்தாய் மேகலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் முள்ளுர் அவர்களும் தொடங்கி வைத்தார்கள்.
சின்ன மாட்டு பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 40001 வழங்கியவர் கௌரி கருணாகரன் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் கொல்லம் பருப்பு, முதல் வெற்றி பெற்ற காளை உரிமையாளர் மகாவிஷ்ணு குமரட்டியாபுரம், இரண்டாவது பரிசு ரூபாய் 30001 வழங்கியவர் சுந்தரமூர்த்தி பந்தல்குடி இரண்டாம் வெற்றி பெற்ற காளை உரிமையாளர் கமலா சக்கமள்புரம், மூன்றாம் பரிசு ரூபாய் 20001 வழங்கியவர் சண்முகத்தாய் மேகலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் முள்ளுர் , மூன்றாவது வெற்றி பெற்ற காளை உரிமையாளர் அனுசியா கச்சேரி தளவாய்புரம்.
பூஞ்சிட்டு பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 30001 வழங்கியவர் மாரியப்பன் அவர்கள் கொல்லம்பரும்பு முதல் வெற்றி அசோக் குமார் துத்திநத்தம், இரண்டாவது பரிசு ரூபாய் 20001 வழங்கியவர் சுப்புராஜ் சென்னை, இரண்டாவது வெற்றி பெற்ற காளை ஆகாஷன் அரசரடி, மூன்றாம் பரிசு ரூபாய் 10001 வழங்கியவர் வீரலட்சுமி சந்தானராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகிரி மூன்றாவது வெற்றி பெற்ற காளை சடையாண்டி பிரதர்ஸ் துலுக்கன்குளம்.
இந்த விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் கொளத்தூர் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி .