மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்தவழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைவழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ளநூலகத்தில் நிறுவப்பட உள்ள அவரது புகைப்படம் இன்று (21.7.2023) திறந்துவைக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி எம்.என்.செந்தில் குமார் முன்னிலையில் தமிழ்நாடு மாநிலமனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி(ஒய்வு) எஸ்.பாஸ்கரன், கோவை வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி, மூத்தவழக்கறிஞர் மற்றும் சிபிஐ முன்னாள் அரசுவழக்கறிஞர் என்.சுந்தரவடிவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் குப்புசாமியின் சிறு வாழ்க்கை வரலாறும் புத்தகமும் வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி வரவேற்றுப் பேசுகையில், நீதிமன்றத்தில் டாக்டர் குப்புசாமியின் வாதங்கள் துல்லியமாகவும், விவரங்கள் நிறைந்ததாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்றார். அவர்வாதிட்ட அனைத்து வழக்குகளிலும் டாக்டர் குப்புசாமி சிறந்த முடிவுகளைப் பெற்றார் என்று கூறினார்.
-சீனி, போத்தனூர்.