தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சப்பர பவனி…

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா வருகிற 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ம் தேதி தங்க தேர் பவனி நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். தங்கத்தேர் திருவிழாவையொட்டி பனிமய மாதா பேராலயம் சார்பில் நேற்று மாலை தங்கத்தேர் வீதி உலா நடைபெறும் வீதிகளில் மாதா சப்பர பவனி நடந்தது.

இந்த சப்பரபவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, மாதாவின் இறையருள் பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாதா சப்பரம் தங்கத்தேர் வீதி உலா நடைபெறும் வீதிகள் வழியாக சென்று ஆலயம் சென்றடைந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts