கோவை சாலையில் அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலே உயிரிழப்பு காவல்துறை விசாரணை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி- கோவை சாலை கோவில் பாளையம் அருகே இன்று அதிகாலை சுமார் 12.45 மணி அளவில் காரும் ஈச்சரும் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் மரணம் அடைந்த நபர் மீனாட்சிபுரம் மூலத்துறை டேம் நெடும்பாறை களம் JCB அம்மன் பரமேஸ்வரன் மற்றும் அவரது மகன் மோகித் என்பது தெரியவந்துள்ளது.


சாலை விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts