சொத்தையும் ஆவணங்களையும் மீட்டு தர முதியவர் மனு!! மனுவை விசாரிக்காமல் காலதாமதம் செய்யும் சார் ஆட்சியர்!! மன உளைச்சலில் முதியவர்!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் M.அப்துல் ஜப்பார். இவருக்கு அப்துல் முத்தலிப்,மைதீன் பீவி,சாஹீல் அமீது,முகமது கனி என 4 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தன் மகள் மைதீன் பீவிக்கு தெரியாமல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகன்கள் 3 பேரும் சேர்ந்து ஆனைமலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அப்துல் ஜாபரை அழைத்துச் சென்று கைரேகை பெற்றுக் கொண்டு சொத்துக்களை ஏமாற்றி வாங்கியதாகத் தெரிகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் தனது மகன்கள் தனது சொத்துக்களை ஏமாற்றி வாங்கியது தெரிந்த முதியவர் அப்துல் ஜப்பார் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து அப்துல் ஜப்பார் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக எனக்கு கண் பார்வை, காது கேட்டும் திறன் மிக மிகக் குறைவு என்பதால் நான் கேட்ட போது அவர்கள் கூறியது என்னவென்றால் உயில் எழுதத்தான் கூட்டிச் சென்று வந்தோம்.

இதில் என்ன எழுதி உள்ளது என்றால் உங்கள் ஆயுள் காலம் முடிந்த பின்பு மகளையும் சேர்த்து எங்கள் நான்கு பேருக்கும் உங்கள் சொத்தில் சம உரிமை உள்ளது என்றும் மேலும் உங்கள் வாழ்நாளில் மருத்துவ செலவு உணவு போன்ற அனைத்தும் செலவுகளையும் நாங்கள் சமமாக பங்கிட்டு கொள்வோம் என்று உறுதிமொழி பத்திரம்தான் இது என்று கூற நானும் பெற்ற பிள்ளைகளை நம்பி அவர்கள் சொன்ன இடத்தில் கைரேகை வைத்தேன்.

மேலும் எனது பாதுகாப்பில் பத்திரமாக வைத்திருந்த எனது வீட்டு மனை பட்டா, ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அண்டை, வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி ரத்து, மின்சார கட்டண் ரசீது ஆகிய முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் எனது மகன் சாகுல் அமீது எடுத்துச் சென்று என்னை இந்திய குடிமகன் எனக்கூற எந்த ஆவணமும் என்னிடம் இல்லாத அகதி ஆக்கிவிட்டான்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் நான் கைரேகை வைத்த பிறகு எனது கதி என்னவெண்றால் வயது முதியவர் சோற்றிற்கு என்ன செய்கிறார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா செத்துவிட்டாரா எட்டிக் கூட பார்க்காமல் சாப்பாட்டுக்காக என் வேண்டி கடைசி மகன் முகமது கனி வீட்டிற்கு சென்ற போது சோறு- சோறு என கேட்டு என் வீட்டிற்கு வந்தால் மரியாதை கெட்டுவிடும் என கூறி கேவலப்படுத்தி என்னை துரத்தி விட்டான் சரி பெரியவன் திடத்தில் நடந்ததை சொல்லலாம் என்று அப்துல் முத்தலிபிடம் கேட்டபோது உங்கள் வேலை எல்லாம் முடிந்து விட்டது.

ஆனைமலையில் எல்லாம் பதிவாகிவிட்டது உன் சொத்துக்கு மகன்களாகிய நாங்கள் மூன்று பேர் மட்டுமே வாரிசு உன் மகளுக்கு சல்லிக் காசு கிடையாது எனக் கூற நான் பசுற்றப்பட்டு நடந்த விஷயங்கள் அணைத்தையும் என் மகளிடத்தில் கூறினேன் பின்பு ஆனைமலை சென்று நகல் எடுத்தேன் அதை என் மகளின் பையன் ரகுமான் சவுண்டாக படிக்க நான் கேட்டு அதிர்ச்சியானேன்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் தான் எனக்குத் தெரிந்தது நம்பிக்கை துரோகம் நடந்து விட்டது. எனக்கு மட்டுமின்றி என் மகளுக்கும் துரோகம் செய்துவிட்டார்கள் என்று. மேலும் பல ஆண்டுகளாக என்னையும் என் மனைவியையும் உடனிருந்து நன்கு கவனித்து வந்தவர் என் மகள் மட்டுமே என் மனைவி சுமார் பத்து மாதங் களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டாள்.

அதன் பின்பு எனக்கு உணவு பரிமாறி நன்கு கவனித்து வருவது என் மகள் மட்டுமே மகன்களை நான் படிக்க வைத்தேன் என் மகளை நான் படிக்க வைக்கவில்லை அன்று கூலி வேலை பார்த்து என் மகள் தனது இரண்டு தம்பிகள் சாதில்அமீது, முகமதுகனி ஆகியோரை பள்ளிகூடம் அனுப்பி பராமரித்து படிக்க வைத்தாள். இவர்களை கரை சேர்த்த தன்னையும் தன் வாழ்க்கையையும் அற்பனித்தாள் என்பதில் துளிகூட மாற்றமில்லை. எனக்கும் என் மகளுக்கும் நடந்த அநீதி இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 10ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இது வரைக்கும் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..? முதியவரின் கண்ணீர் துடைக்கப்படுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts