நீட் தேர்வினை ரத்து செய்யகோரி திமுக சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து நேற்று தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில்
நடைபெற்றது.

மாலை வரை நடந்த உண்ணாவிரத போராட்டத்தினை திரு துணை பொது செயலாளர் கனிமொழி அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்து வைத்தனர்.

உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகையா, மேயர் திரு. என்.பி.ஜெகன் ஆகியோர் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts