லாரி மோதி காட்டு மாடு உயிர் இழப்பு!! வனத்துறையினர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை!!!

கோவை வனச்சரகம், தடாகம் ஆனைகட்டி சாலையில், வேகமாக வந்த லாரி மோதியதில், காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், லாரியை பறிமுதல் செய்தனர், மேலும், லாரி ஓட்டுநரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதனை தொடர்ந்து இன்று காலையில், மாவட்ட வன அலுவலர், அருண் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில், வனக்கால்நடை மருத்துவர் சுகுமாரால் காட்டு மாட்டுக்கு பிரேத பரிசோதனை செய்யபட்டது. பிரேத பரிசோனையில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும் வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது, தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts